TNPSC Thervupettagam

நிதி ஆயோக் அமைப்பின் நிதி வளக் குறியீடு 2025

January 26 , 2025 2 days 64 0
  • நிதி ஆயோக் அமைப்பின் முதல் நிதி வளக் குறியீடு (FHI) அறிக்கையில் பட்டியலிடப் பட்டுள்ள மாநிலங்களில் ஒடிசா, சத்தீஸ்கர், கோவா மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட 'சாதனை மாநிலங்களாக' உருவெடுத்துள்ளன.
  • 18 முக்கிய மாநிலங்களின் மதிப்பீட்டினை உள்ளடக்கிய 'நிதி வளக் குறியீடு 2025' என்ற தலைப்பிலான இந்த அறிக்கையானது, 2022-23 ஆம் ஆண்டின் நிலைமை மீதான அடிப்படையில் மாநிலங்களைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகியவை இந்தக் குறியீட்டில் மோசமான செயல் திறன் கொண்ட மாநிலங்களாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
  • ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க பல்வேறு நிதிச் சவால்களை எதிர்கொண்டுள்ளதால், 'முன்னேற்றத்தினை நாடுபவை’ பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகியவை 'முன்னணியில் உள்ளவை' பிரிவின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளன.
  • தமிழ்நாடு, பீகார், இராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்டவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்