மத்திய அரசானது நிதி ஆயோக் அமைப்பை, நான்கு முழுநேர உறுப்பினர்கள் மற்றும் 15 மத்திய அமைச்சர்களை, பதவி வழி உறுப்பினர்கள் அல்லது சிறப்பு அழைப்பாளர்களாகக் கொண்டு மறுசீரமைத்துள்ளது.
பிரதமர் அதன் தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் K. பெரி துணைத் தலைவராகவும் தொடர்ந்து பதவி வகிப்பர்.
அறிவியலாளர் V.K. சரஸ்வத், வேளாண் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தைகள் நல மருத்துவர் V.K. பால் மற்றும் பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோரும் தொடர்ந்து முழு நேர உறுப்பினர்களாகப் பதவி வகிப்பர்.
நான்கு பதவி வழி உறுப்பினர்களாக மத்தியப் பாதுகாப்பு, உள்துறை, வேளாண்மை மற்றும் நிதி அமைச்சர்கள் பதவி வகிப்பர்.
இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தேசிய அமைப்பு எனும் ‘நிதி ஆயோக்’ அமைப்பு 2015 ஆம் ஆண்டில் 65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவிற்குப் பதிலாக உருவாக்கப் பட்டது.