நிதி ஆயோக் அமைப்பின் 9வது ஆளுகைக் குழு கூட்டத்திற்குப் பிரதமர் அவர்கள் தலைமை தாங்கினார்.
26 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன ஆனால் 10 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கு பெற வில்லை.
இந்த மாநாட்டின் போது, ஐந்து முக்கியப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அவை
குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம்;
மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத் தன்மை;
சுகாதாரம்: அணுகல், மலிவான விலை, மற்றும் மருத்துவ நலச் சேவையின் தரம்;
பள்ளிக் கல்வி: அணுகல் மற்றும் தரம் மற்றும் பள்ளிகளுக்கான நிலம் மற்றும்
சொத்து: அணுகல், எண்ணிமமயமாக்கல், பதிவு மற்றும் உரிம மாற்றம்.