இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் ‘அந்தர்த்ரிஷ்டி’ என்ற பெயரிலான நிதி உள்ளடக்கக் கட்டுப்பாட்டகத்தினைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு அளவுருக்களைச் சேகரிப்பதன் மூலம் நிதி உள்ளடக்கத்தின் ஒரு முன்னேற்றத்தை மதிப்பிடச் செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் தேவையான நுண்ணறிவை இது வழங்கும்.
இந்த வசதியானது நாடு முழுவதிலும் உள்ள சிறிய அளவிலான ஒரு நிதி ஒதுக்கீட்டின் அளவை மதிப்பிட்டு, அத்தகையப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும்.