- இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் நிதி உள்ளடக்கத்தின் பரவலை அளவிடுவதற்கான கூட்டு நிதி உள்ளடக்கக் குறியீட்டினை (Financial Inclusion – FI) அறிவித்துள்ளது.
- 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலகட்டத்தில் 43.4 ஆக இருந்து FI குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த கால கட்டத்திற்கான FI குறியீடானது 53.9 ஆக உள்ளது.
FI குறியீடு பற்றிய தகவல்கள்
- இந்த வருடாந்திரக் குறியீடானது ஒவ்வொரு வருடத்தின் ஜூலை மாதத்திலும் வெளியிடப்பட உள்ளது.
- இக்குறியீடானது அரசு மற்றும் அந்தந்த துறைகளின் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஆலோசனையோடு ஓய்வூதியத் துறை, வங்கி, முதலீடுகள், காப்பீடுகள், மற்றும் தபால் ஆகிய துறைகள் பற்றிய விவரங்களை உள்ளடக்கியது.
- 0 முதல் 100 வரையிலான ஒற்றை மதிப்பில் பல்வேறு நிதி உள்ளடக்க அம்சங்கள் குறித்த தகவல்களை இந்தக் குறியீடு வெளிப்படுத்துகிறது.
- இங்கு 0 என்பது முழுமையான நிதி உள்ளடக்கத்தைக் குறிக்கிறது.
- 100 என்பது நிறைவான நிதி உள்ளடக்கத்தைக் குறிக்கிறது.
- இது எந்தவொரு அடிப்படை ஆண்டும் நிர்ணயிக்கப்படாமல் உருவாக்கப்பட்டுள்ளது.