TNPSC Thervupettagam

நிதி உள்ளடக்க அளவீடுகள் அறிக்கை

November 9 , 2021 1113 days 541 0
  • பாரத ஸ்டேட் வங்கியானது தனது நிதி உள்ளடக்க அளவீடுகள் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான சௌமியா காந்தி கோஷ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் 100000 இளம் பருவத்தினருக்கு 13.6 என்ற ஒரு எண்ணிக்கையில் என்று இருந்த வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையானது, 2020 ஆம் ஆண்டில் 14.7 ஆக உயர்ந்துள்ளது.  
  • பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்றவையே இதற்கான காரணமாகும்.
  • இந்த எண்ணிக்கையானது ஜெர்மனி, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
  • 2015 ஆம் ஆண்டில் 1000 இளம்பருவத்தினர் மத்தியில் 183 ஆக இருந்த இணைய வங்கிப் பரிவர்த்தனைகள் 2019 ஆம் ஆண்டில் 13, 615 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா கணக்குகளில் இருப்புத் தொகைகளை அதிக அளவில்  கொண்ட மாநிலங்களில் குற்றங்கள் ஒரு சரிவைச் சந்தித்துள்ளன.
  • அதிக அளவில் பிரதான் மந்திரி ஜன்தன் கணக்குகள் துவக்கப் பட்ட மாநிலங்களில் மது மற்றும் புகையிலைப் பொருட்கள் போன்ற போதைப் பொருட்களின் நுகர்வானது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் பொருளாதார அளவில் கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 34,174 என்ற எண்ணிக்கையில் இருந்த கிராமப் புற வங்கி அலுவலகங்களின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12.4 லட்சமாக உயர்ந்துள்ளது.     

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்