இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நிதி உள்ளடக்கக் குறியீட்டினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இது மார்ச் மாதம் முடிவடைந்த கடந்த நிதி ஆண்டிற்கான குறியீடாகும்.
நாட்டில் நிதி உள்ளடக்கத்தின் பரவலைக் கணக்கிடுவதற்காக பல பரிமாணங்களின் அடிப்படையில் ஒரு நிதி உள்ளடக்கக் குறியீட்டைத் தயாரித்து வெளியிட உள்ளதாக RBI கூறியுள்ளது.