இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது, பிப்ரவரி 24 மற்றும் 28 ஆகிய நாட்களுக்கு இடையில் 10வது நிதி சார் கல்வியறிவு வாரத்தினை (FLW) அனுசரிக்கிறது.
நாடு முழுவதும் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப் படுகிறது.
பெண்கள் மீதான சிறப்புக் கவனம், மிகவும் சீரான மற்றும் மிகவும் வளமான ஒரு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிதிப் பங்கேற்பில் பாலினச் சமத்துவத்தின் ஒரு அவசியத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Financial Literacy: Women’s Prosperity" என்பதாகும்.