இந்திய ரிசர்வ் வங்கியானது, ஆண்டிற்கு இரண்டு முறை அதனால் மேற்கொள்ளப் படும் நிதி நிலைத்தன்மை அறிக்கையை (FSR) வெளியிட்டது.
இதன் படி மொத்த வாராக் கடன்களுடன் (GNPA) வங்கி அமைப்பின் சொத்துத் தரம் மேம்பட்டு உள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.4 சதவீதமாக இருந்த அதன் விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு 67.6 சதவீதமாக இருந்த வாராக் கடன்களை ஈடு செய்ய வைக்கப் படும் நிதி விகிதம் ஆனது (PCR) 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 70.9 % ஆக மேம்படுத்தப் பட்டுள்ளது.
வாராக் கடன்களை ஈடு செய்ய வைக்கப்படும் நிதி விகிதம் என்பது, மோசமானக் கடன்களால் ஏற்படும் இழப்புகளுக்கு வங்கி ஒதுக்கும் நிதியின் சதவீதமாகும்.