நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிமன்றக் குழு நிதி நிகழ்வுகள் மீது சீராய்வு
November 25 , 2017 2557 days 896 0
நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி மன்றத்தின் துணைக் குழு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மீது பாதிப்பை ஏற்படுத்தும் உலகளாவிய மற்றும் உள்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை ஆய்வு செய்தது.
இந்தக் குழுவிற்கு ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் தலைமை தாங்கினார்.
நிதி நிலைமைத் தன்மை மற்றும் வளர்ச்சி மன்றம் என்பது இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழுவாகும்.
இந்த மன்றத்தின் தலைவர் மத்திய நிதி அமைச்சர் ஆவார்.
இதன் உறுப்பினர்களுள்
நிதித்துறையின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர்கள் (ரிசர்வ் வங்கி, செபி, ஐஆர்டிஏ, பிஎஃப்ஆர்டிஏ)
பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் அல்லது நிதித் துறையின் செயலாளர்
தலைமை பொருளாதார ஆலோசகர்.
இந்த புதிய அமைப்பு நிதி நிலைத் தன்மையை பராமரிப்பது, நிதித்துறை வளர்ச்சி, ஒழுங்குமுறை ஆணையங்களிடையே ஒத்துழைப்பு, மற்றும் பொருளாதாரத்தின் மீதான பெரும் தாக்கங்கள் கொண்ட நிபந்தனைகளை கண்காணிப்பது ஆகிய செயல்களுக்கான நடைமுறையை பலப்படுத்தி முறைப்படுத்த திட்டம் தீட்டுகிறது.