TNPSC Thervupettagam

நினைவகத் தரவு செயலாக்கத் தொழில்நுட்பம்

November 13 , 2024 9 days 51 0
  • இஸ்ரேலிய நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கணினிகள் நேரடியாக நினைவகத்திலேயே தரவைச் செயலாக்க வழி வகை செய்கின்ற ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பானது நினைவகம் மற்றும் CPU ஆகியவற்றிற்கு இடையில் தரவுப் பரிமாற்றத்துடன் தொடர்புடைய செயல்திறம் சார்ந்த குறைபாடுகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது "செயலாக்கிகளின் செயல்திறனில் உள்ள இடைவெளி-memory wall" என்ற ஒரு பிரச்சனையை நிவர்த்தி செய்வதில் ஒரு முக்கியமானப் படிநிலையைக் குறிக்கிறது.
  • செயலாக்கியின் வேகம் மற்றும் நினைவக திறன் ஆனது தரவுப் பரிமாற்ற வீதங்களை விட வேகமாக அதிகரிக்கும் போது இந்தப் பிரச்சனை எழுகிறது.
  • நினைவகத்தின் உள்ளேயேயான தரவுச் செயலாக்கத் தொழில்நுட்பம் ஆனது, சில கணக்கீடுகளை நேரடியாக நினைவகத்திற்குள்ளேயே நிகழ அனுமதிக்கிறது.
  • ஆராய்ச்சியாளர்கள் PyPIM என்ற தளத்தை உருவாக்கினர்.
  • இந்த இயங்குதளமானது பைதான் நிரலாக்க மொழியை எண்ணிமச் செயலாக்க -நினைவகச் செயலாக்க (PIM) தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது.
  • PyPIM என்பது நினைவகத்திற்குள் நேரடியாகச் செயல்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்ற புதிய வழிமுறைகளை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்