இஸ்ரேலிய நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கணினிகள் நேரடியாக நினைவகத்திலேயே தரவைச் செயலாக்க வழி வகை செய்கின்ற ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பானது நினைவகம் மற்றும் CPU ஆகியவற்றிற்கு இடையில் தரவுப் பரிமாற்றத்துடன் தொடர்புடைய செயல்திறம் சார்ந்த குறைபாடுகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது "செயலாக்கிகளின் செயல்திறனில் உள்ள இடைவெளி-memory wall" என்ற ஒரு பிரச்சனையை நிவர்த்தி செய்வதில் ஒரு முக்கியமானப் படிநிலையைக் குறிக்கிறது.
செயலாக்கியின் வேகம் மற்றும் நினைவக திறன் ஆனது தரவுப் பரிமாற்ற வீதங்களை விட வேகமாக அதிகரிக்கும் போது இந்தப் பிரச்சனை எழுகிறது.
நினைவகத்தின் உள்ளேயேயான தரவுச் செயலாக்கத் தொழில்நுட்பம் ஆனது, சில கணக்கீடுகளை நேரடியாக நினைவகத்திற்குள்ளேயே நிகழ அனுமதிக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் PyPIM என்ற தளத்தை உருவாக்கினர்.
இந்த இயங்குதளமானது பைதான் நிரலாக்க மொழியை எண்ணிமச் செயலாக்க -நினைவகச் செயலாக்க (PIM) தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது.
PyPIM என்பது நினைவகத்திற்குள் நேரடியாகச் செயல்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்ற புதிய வழிமுறைகளை வழங்குகிறது.