மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT-M) புனர்வாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டிற்கான டிடிகே மையத்தில் (Rehabilitation Research and Device Development - R2D2) ‘Arise’ எனப்படும் ‘நின்றபடியே செல்லக் கூடிய சக்கர நாற்காலி’ ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
Arise ஆனது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சரான தாவர்சந்த் கெஹ்லாட் என்பவரால் முறையாக வெளியிடப்பட்டது.
இந்தச் சக்கர நாற்காலியானது இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் வெல்கம் அமைப்பின் ஆதரவுடன் ஃபீனிக்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து IIT-M ஆல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளது.
Arise ஐப் பயன்படுத்தி, ஒரு மாற்றுத் திறனாளி நபர் தனியாகவோ அல்லது மற்றவரின் உதவியுடனோ நிற்கும் நிலையில் இருந்து உட்கார்ந்த நிலைக்கும் உட்கார்ந்த நிலையிலிருந்து நிற்கும் நிலைக்கும் மாறலாம்.