மிகவும் மற்றும் கொடிய உயிர் கொல்லி நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கேரளா மாநிலத்தில் முதன் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதிப்பானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக் கூடிய நோயாகும். இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளில் மோசமான நோய்களை உண்டாக்க வல்லவை.
டீரோபஸ் இனத்தின் டீரோபோடைடியே குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வௌவால் இந்த வைரஸ்களின் இயற்கை உறைவிடத் தாங்கிகளாகும்.
இந்த வைரஸின் தாக்குதலானது முதலில் 1998 ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள கம்பங் சுன்கய் நிமா எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரசானது காற்றின் வழியே பரவாது. ஆனால் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட வெளவால்கள் மற்றும் பன்றிகளுடனான நேரடித் தொடர்பின் மூலம் இந்த வைரஸ் பரவ வல்லது.
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களினால் மனிதர்களிடையேயும் இந்த வைரஸ் பரவும்.
கடுமையான சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல், மூளை வீக்கம், காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலிப்பு (delirium) ஆகியவற்றை இது ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட நோயாளி 48 மணி நேரத்தில் கோமா நிலையையும் அடைய வாய்ப்புள்ளது.