நிப்பான் லைஃப் இந்தியா சொத்து மேலாண்மை நிறுவனமானது நிப்பான் இந்தியா நிஃப்டி ஆட்டோETF (exchange-traded funds) என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்குவதாக அறிவித்தது.
இது இந்தியாவில் இம்மாதிரியிலான முதல் வகையாகும்.
இந்தப் புதிய நிதி அளிப்புகளானது 2022 (The New Fund Offer) ஆம் ஆண்டு ஜனவரி 05 அன்று தொடங்கி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று நிறைவடைகின்றன.
இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1000 ஆகும்.
அதன் பிறகு முதலீட்டாளர்கள் ஒரு ரூபாயின் மடங்குகளில் இதில் முதலீடுகளைச் சேர்க்கலாம்.
நிப்பான் இந்தியா நிஃப்டி ஆட்டோ ETF (பரிமாற்ற வர்த்தக நிதி) என்பது நிஃப்டி ஆட்டோ குறியீட்டினை ஒத்திருக்கும் ஒரு திறந்தவெளி திட்டமாகும்.
இது 15 முன்னணி நிறுவனங்களுக்கான (நிஃப்டி ஆட்டோ குறியீடு செயல்முறைப்படி) வெளிப்பாட்டினை வழங்கும் ஒரு குறியீட்டினைப் போன்ற விகிதத்தில் உள்ள நிஃப்டி ஆட்டோ குறியீட்டினை உள்ளடக்கியப் பங்குகளில் முதலீடு செய்யும்.
இங்கு நிறுவனம் என்பது 2, 3 (அ) 4 சக்கர வாகனங்கள் மற்றும் வாகனத் துணைக் கருவிகள் மற்றும் டயர்கள் உள்ளிட்டத் துறைகளை சார்ந்த வாகன நிறுவனங்களைக் குறிக்கச் செய்கிறது.