TNPSC Thervupettagam

நியாயமான சந்தை நடத்தைகளுக்கான குழு - (Panel on Fair Market Conduct)

August 3 , 2017 2805 days 1173 0
  • Fair market Conduct எனப்படும், ‘நியாயமான சந்தை நடத்தைகள்’ தொடர்பான குழு ஒன்றினை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India - SEBI) அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் மக்களவைச் செயலாளரும் , சட்டத்துறைச் செயலாளருமான டி.கே.விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தற்போது நடைமுறையில் உள்ள இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறைகள் மற்றும் Fraudulent and Unfair Trade Practices(FUTP) எனப்படும் மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்து பரிந்துரைப்பது இந்த குழுவின் முக்கிய பணியாகும்.
  • நிறுவனங்களை கையகப்படுத்தும் பொழுது , அவற்றின் விலை குறித்த இரகசியங்களை கையாள்வது மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் முக்கிய தகவல்களை பிறருக்கு விற்பதை தடுப்பதற்கான விதிமுறைகளை நிறுவனங்களின் சட்டத்தின் (Companies Act, 2013)படி இந்தக் குழுவானது வகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top