பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, 2024-25 ஆம் ஆண்டின் சர்க்கரை உற்பத்திப் பருவத்திற்கான கரும்பு உற்பத்தியின் நியாயமான மற்றும் இலாப விலையை (FRP) 10.25% என்ற சர்க்கரை மீள்கையகப் படுத்தல் என்ற விகிதத்தில் குவின்டாலுக்கு 340 ரூபாயாக அறிவித்து ஒப்புதல் அளித்துள்ளது.
இது 2023-24 ஆம் ஆண்டின் நடப்புப் பருவ கரும்பு உற்பத்திக்கான நியாயமான மற்றும் இலாப விலையை விட சுமார் 8% அதிகமாகும்.
திருத்தப்பட்ட FRP ஆனது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
நாடு முழுவதும் வழங்கப் படும் FRP ஆனது 1966 ஆம் ஆண்டு கரும்புக் கட்டுப்பாட்டு ஆணையின் படி நிர்வகிக்கப் படுகிறது.