TNPSC Thervupettagam

நியுக்மதுங் பால் பண்ணை

September 21 , 2023 303 days 234 0
  • தேசிய காட்டு எருது ஆராய்ச்சி மையம் (NRCY) ஆனது நியுக்மதுங் எனுமிடத்தில் உள்ள மையத்தின் காட்டு எருது பண்ணையில் நியுக்மதுங் பால் பண்ணை என்ற "பால் விற்பனையகத்தினை" தொடங்கியுள்ளது.
  • இது அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • காட்டு எருதின் பால் ஆனது பாலேடு நிறைந்த வெள்ளை நிற, கெட்டியான, இனிப்பு, மணம் மற்றும் புரதம், கொழுப்பு, லாக்டோஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்த மற்றும் பசும்பாலை விட மொத்த திடச் சத்துக்கள் நிறைந்தது.
  • இதில் 5.29-8.73 சதவீதம் கொழுப்பு, 3.45-4.27 சதவீதம் புரதம் மற்றும் 0.64-0.82 சதவீதம் கரிமங்கள்  மற்றும் 15.63-19.63 சதவீதம் மொத்த திடச் சத்துக்கள் உள்ளன.
  • நியுக்மதுங் பால்பண்ணையானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • 'இமயமலையின் கப்பல்' என்று குறிப்பிடப்படும் இந்த விலங்குகளின் பாலில் இருந்து பெறப்படும் பல வகையான பொருட்களைப் பிரபலப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்