TNPSC Thervupettagam

நியூசிலாந்தின் புகையிலைச் சட்டம்

December 17 , 2022 583 days 323 0
  • 2009 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் விற்பனையைத் தடை செய்வதற்கான ஒரு விதிமுறையினை நியூசிலாந்து அரசு ஏற்றுக் கொண்டது.
  • இந்தக் கட்டுப்பாடுகளானது 2023 ஆம் ஆண்டில் அமலுக்கு வர உள்ளது.
  • இது புகைபிடிப்பதைத் தடை செய்திட உலகின் முதல் புகையிலைச் சட்டம் ஆகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் "புகை இல்லாத நாடாக" மாறுவதை நியூசிலாந்து நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும், நாடு முழுவதும் 6,000 ஆக உள்ள சிகரெட் சார்ந்த புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 600 ஆகக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இவற்றின் அடிமையாக்கும் தன்மையைக் குறைப்பதற்காக, புகையிலை சார்ந்தத் தயாரிப்புகளில் உள்ள நிகோடின் அளவைக் குறைப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்துகிறது.
  • வயது வந்தோர் பிரிவில் 8 சதவீதம் பேர் மட்டுமே தினசரி அடிப்படையில் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளவர்களாக இருப்பதால், நியூசிலாந்தில் புகை பிடிப்பவர்களின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்