TNPSC Thervupettagam

நியூட்ரான் நட்சத்திரங்கள்/விசித்திரமான செயலிழந்த நட்சத்திரங்கள்

August 19 , 2024 97 days 136 0
  • பால் வெளி அண்டத்தின் மையப்பகுதிக்கு அருகில் பத்து மர்மமான நியூட்ரான் நட்சத்திரங்கள் காணப்படுவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வேகமாக சுழல்கின்ற இவை அனைத்தும் "துடிப்பு அண்டங்கள்" என வகைப்படுத்தப் படுகின்றன.
  • இந்த மர்மமான நட்சத்திரங்கள், 18,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் அடர்த்தியான கோள வடிவ திரள்களுக்குள் அமைந்துள்ளன.
  • அவற்றின் தனித்துவமானச் சூழலின் காரணமாக அவை வினோதமான மற்றும் திருகு வடிவங்களைக் கொண்டிருக்கலாம்.
  • இந்தத் துடிப்பண்டங்கள் டெர்சான் 5 எனப்படுகின்ற கோள வடிவத் திரளில் காணப் படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளன.
  • 12 பில்லியன் முதல் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நூறாயிரக்கணக்கான வெவ்வேறு நட்சத்திரங்கள் இங்கு காணப்படுகின்றன.
  • டெர்சான் 5 என்பது பால் வெளி அண்டத்தில் மிகவும் திரள்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும் என்பதோடு இங்கு ஏற்கனவே குறைந்தது 39 அறியப்பட்ட துடிப்பண்டங்கள் திரண்டு காணப்படுகின்றன.
  • மூன்று புதிய அரிய ஸ்பைடர் துடிப்பண்டங்களும் இந்தப் பகுதியில் கண்டறியப்பட்டு உள்ளன.
  • அவை "ரெட்பேக்ஸ்" அல்லது "பிளாக் விடோவ்ஸ்" என வகைப்படுத்தப்படுகின்றன என்பதோடு அவை மிக அருகில் வரும் நட்சத்திரங்களின் மீது உயர் ஆற்றல் கதிர்வீச்சு "தாக்கத்தினை" செலுத்துகின்றன.
  • ரெட்பேக் ஸ்பைடர் துடிப்பண்டங்கள் ஆனது, சூரியனின் நிறையில் 10 சதவீதம் முதல் சுமார் 50 சதவீதம் வரையிலான நிறை கொண்ட பல்வேறு துணை நட்சத்திரங்களை உள்ளிழுக்கின்றன.
  • பிளாக் விடோவ்ஸ் ஸ்பைடர் துடிப்பண்டங்கள் சூரியனின் நிறையில் சுமார் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நிறை கொண்ட பல்வேறு சிறிய நட்சத்திரங்களை உள் இழுக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்