தமிழ்நாட்டிலுள்ள போடியில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வல்லுநர் மதிப்பீட்டுக் குழு இந்திய நியூட்ரினோ ஆய்வகப் பிரச்சினையை சிறப்பு வழக்காக எடுத்து ஆராய்ந்த பிறகே அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய வன விலங்குகள் ஆணையம் ஆகியவற்றின் அனுமதிக்காக அனுப்பப்படும். மதிகெட்டான் சோலை தேசியப்பூங்கா முன்மொழியப்பட்டுள்ள இப்பகுதியிலிருந்து சுமார்9 கி.மீ தூரத்தில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளதால் இவ்வாணையத்தின் அனுமதியும் தேவையானது ஆகும்.
கதிரியக்கக் கூறுகள் (Radio Active Elements) சிதைவினால் உண்டாகும் துணை அணுத்துகள்களான நியூட்ரினோக்கள் மின்னூட்டத்தை இழக்கும் ஒரு அடிப்படைத் துகள்களாகும். (Elementary Particles).
பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, சூரியன் மற்றும் பிற நட்சத்திரங்களில் ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கான அடிப்படைக் கூறே நியூட்ரினோக்கள் ஆகும்.
இத்திட்டம் அணு ஆற்றல் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் உதவியோடு செயல்படுத்தப்படுகிறது. இதில் அணு ஆற்றல் துறையானது இத்திட்டத்தை செயலாக்கம் செய்யும் அமைப்பாக (Nodal Agency) செயல்படும்.
ஏறத்தாழ 1200 மீட்டர் அளவிற்கு பாறையினால், சூழப்பட்ட உலகத்தரத்திலான, பூமிக்கடியிலான ஆய்வகத்தைக் கட்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அடிப்படைத் துகள்களான நியூட்ரினோக்களின் மீது அடிப்படை ஆராய்ச்சியை மேற்கொள்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அண்டவெளியின் கதிர் வீச்சுகளிலிருந்து நியூட்ரினோவை கண்டறியும் கருவிக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்காக பூமிக்கடியில் இந்த ஆய்வகம் நிறுவப்பட உள்ளது.