நியூயார்க் நகரம் ஆனது அதிகாரப்பூர்வமாக கடும் நெரிசல் விலை/ அதிகப்படியான போக்குவரத்து காரணமான கூடுதல் விலை நிர்ணய முறையை செயல்படுத்தி, இந்த நடவடிக்கையில் அமெரிக்க பெருநகரப் பகுதிகளில் அதன் முன்னோடியாக மாறியது.
இது மன்ஹாட்டனின் நியமிக்கப்பட்ட மண்டலத்திற்குள் நுழையும் பெரும்பாலான ஓட்டுநர்கள் 9 டாலர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
உலகின் மிகவும் மோசமான போக்குவரத்தைக் குறைக்கும் நோக்கில் இலண்டன், ஸ்டாக்ஹோம் மற்றும் சிங்கப்பூரில் இதேபோன்ற முன்னெடுப்புகள் பின்பற்றப் படுகின்றன.