TNPSC Thervupettagam

நியூராலிங்க் சில்லுகள்

June 3 , 2023 543 days 327 0
  • எலோன் மஸ்க் 2016 ஆம் ஆண்டில் நியூராலிங்க் என்ற ஒரு நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தினை நிறுவினார்.
  • நியூராலிங்க் தற்போது மூளை-கணினி இடைமுகம் எனப்படும் ஒரு மூன்றாம் வகை மருத்துவச் சாதனத்தை உருவாக்கி வருகிறது.
  • இந்தச் சாதனம் ஆனது மூளையினை ஊடலைச் சமிஞ்ஞைகள் மூலம் ஒரு வெளிப்புறக் கணினியுடன் இணைத்து, முன்னும் பின்னுமாக ஒரு தொடர்ச்சியான தொடர்பினைச் செயல்படுத்துகிறது.
  • இந்தச் சாதனமே இணைப்பு (லிங்க்) எனப்படும் நாணய அளவிலான ஒரு செயல்பாட்டு அலகு ஆகும்.
  • இது ஒரு துல்லியமான அறுவைச் சிகிச்சையினை மேற்கொள்ளச் செய்யும் ஒரு எந்திரத்தினைப் பயன்படுத்தி மண்டை ஓட்டில் ஏற்படுத்தப் படும் ஒரு சிறிய வட்டு வடிவ சிறு பகுதியில் பொருத்தப் படுகிறது.
  • இந்த சில்லுக்களிலிருந்து ஆயிரம் சிறிய நியூரான்களைப் பிரித்து மூளையில் உள்ள சில நியூரான்களுடன் இந்த எந்திரம் இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்