TNPSC Thervupettagam

நியூ கலிடோனியா வாக்கெடுப்பு

October 10 , 2020 1417 days 600 0
  • சமீபத்தில் பிரெஞ்சுப் பிரதேசமான நியூ கலிடோனியா ஆனது பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக வேண்டி நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களித்து உள்ளது.
  • இந்த வாக்கெடுப்பானது நொவ்மியா ஒப்பந்தம் எனப்படும் 1998 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு காலணியாதிக்க நீக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • நியூ  கலிடோனியா என்பது தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிரான்சின் ஒரு சிறப்புப் பிரதேசம் மற்றும் ஒரு தீவுக் கூட்டமாகும்.
  • அங்கு கணக்ஸ் என்ற பூர்வ குடிமக்கள் மொத்த மக்கள் தொகையில் 39% ஆக உள்ளனர். மேலும் அங்கு ஐரோப்பியக் குடியிருப்பாளர்கள் (கேல்டோச்சஸ்) 27% என்ற அளவில் உள்ளனர்.
  • நியூ கலிடோனியா ஆனது தனது பூர்வகுடி கணக்ஸ் மக்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆகியோருக்கிடையே மிகப்பெரிய பிளவைக் கொண்டுள்ளது. அங்கு கணக்ஸ் மக்கள் விடுதலைக்கு ஆதரவாகவும் ஐரோப்பியர்கள் அந்த விடுதலைக்கு எதிராகவும் உள்ளனர்.

வரலாறு

  • நியூ கலிடோனியா பகுதியானது பிரிட்டனைச் சேர்ந்த கடற் பயணியான ஜேம்ஸ் குக் என்பவரால் 1774 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது 1853 ஆம் ஆண்டில் பிரான்சுடன் இணைக்கப்பட்டது.
  • 1946 ஆம் ஆண்டில், நியூ கலிடோனியாவானது ஒரு அயல்நாட்டுப் பிரதேசமாக உருவெடுத்தது.
  • 1953 ஆம் ஆண்டு வாக்கில், பிரெஞ்சுக் குடியுரிமையானது பூர்வ குடி என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து நியூ கலிடோனியா மக்களுக்கும் வழங்கப் பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்