TNPSC Thervupettagam

நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் புலி

January 4 , 2024 326 days 316 0
  • மேற்கு வங்காளத்தின் மலைகளில் அமைந்துள்ள நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் வங்காளப் புலி தென்பட்டுள்ளது.
  • இதன் மூலம் கடல் மட்டத்திலிருந்து 10,509 அடி உயரத்தில் இந்த பெரும்பூனை இனங்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
  • நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவானது, மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது வடகிழக்குப் பகுதியில் காணப்படும் வளம் மிக்க உயிரியல் மண்டலங்களில் ஒன்றாகும்.
  • இது சிக்கிமில் உள்ள பாங்கோலகா வனவிலங்குச் சரணாலயத்தையும் பூடானின் மிக கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் கொண்ட டூர்சா வளம்காப்புப் பகுதியையும் இணைக்கிறது.
  • சமீபத்திய கணக்கெடுப்பின் படி, மேற்கு வங்காளத்தில் 101 புலிகள் உள்ளன.
  • சுந்தரவனப் புலி வாழ் மண்டலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வாழும் அனைத்துப் புலிகளும் கண்காணிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்