TNPSC Thervupettagam

நிரந்தரப் பிரதிநிதி - ஐ.நா தூதர்

May 4 , 2020 1574 days 702 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியாக வெளி விவகார அமைச்சகத்தின் தற்போதைய செயலாளரான டி.எஸ்.திருமூர்த்தியை இந்தியா நியமித்துள்ளது.
  • நிரந்தர திட்டமென்பது ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் ஐக்கிய நாடுகளுக்கு அனுப்பும் ஒரு தூதரகப் பணி ஆகும்.
  • இது ஒரு நிரந்தரப் பிரதிநிதி தலைமையிலானது. அவர் "ஐ.நா தூதர்" என்றும் குறிப்பிடப் படுகிறார்.
  • இது நாடுகளின் பிரதிநிதித்துவம் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் வருகிறது.
  • ஜனவரி 1, 1942 அன்று வாஷிங்டனில் நடந்த ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் இந்தியாவும் இருந்தது.
  • ஏப்ரல் 25 முதல் ஜூன் 26, 1945 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சர்வதேச அமைப்பின் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் பங்கேற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்