TNPSC Thervupettagam

நிர்யாத் மித்ரா கைபேசி செயலி

August 10 , 2018 2171 days 764 0
  • மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் நாட்டில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கென்று நிர்யாத் மித்ரா என்ற கைபேசி செயலியை வெளியிட்டு இருக்கின்றது.
  • இந்த செயலியானது நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்கள் சங்கமான இந்திய ஏற்றுமதி சங்கத்தினர்கள் கூட்டமைப்பால் (Federation of Indian Export Organisation – FIEO) வடிவமைக்கப்பட்டது.
  • FIEO என்பது வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய தொழில்முனைவோர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் உதவிடுவதற்கு பொறுப்பானதாக இருக்கும் இந்தியாவின் தலைமை வர்த்தக மேம்பாட்டுச் சங்கமாகும்.
  • இது 1965ம் ஆண்டு புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு, வர்த்தகத்துறை அமைச்சகத்தாலும் தனியார் வர்த்தக மற்றும் தொழிற்துறையாலும் இணைந்து ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்