மத்திய அரசு ஆனது, ‘நிறுவனங்களின் ஆவணக் காப்புப் பெட்டகம்’ என்ற புதியதொரு எண்ணிமத் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் நோக்கம் ஆனது, வணிக மற்றும் நிறுவனங்களின் ஆவணங்களின் நிர்வாக மேலாண்மை மற்றும் சரிபார்ப்பை நெறிப்படுத்துவதற்கானதாகும்.
இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள தேசிய மின் ஆளுகைப் பிரிவால் (NeGD) உருவாக்கப்பட்டது.
இந்தப் பாதுகாப்பான, மேகக் கணிமை அடிப்படையிலான இயங்குதளமானது, பெரு நிறுவனங்கள், MSME நிறுவனங்கள், அறக் கட்டளைகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு உதவுகிறது.
இது பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் (MCA), சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டமைப்பு (GSTN) மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) போன்ற அமைப்புகளுக்கு அத்தியாவசிய ஆவணங்களுக்கான உடனடி அணுகலை வழங்கி, தடையற்ற இணைப்பினை வழங்குகிறது.