நிலக்கரிச் சுரங்கத்தின் மிகக் கடுமையான தொழில் மற்றும் அதில் பணியாற்றும் மக்கள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதியன்று நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
பூமியில் மிகப் பரவலாகக் காணப்படும் புதைபடிவ எரிபொருள் நிலக்கரி ஆகும். நிலக்கரிச் சுரங்கம் என்பது பூமியிலிருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் ஒரு செயல்முறையாகும்.
இந்தியாவில் சுரங்கத் தொழிலானது 1774 ஆம் ஆண்டில் தொடங்கியது.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஜான் சம்னெர் மற்றும் சுடோனியஸ் கிராண்ட் ஹெல்த்தி ஆகியோர் மேற்கு தாமோதர் நதிப் பகுதியில் மேற்கு வங்கத்தில் உள்ள ராணிகஞ்ச் நிலக்கரிச் சுரங்கத்தில் வணிக ரீதியான சுரங்கத் தொழிலைத் தொடங்கினர்.
ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், மற்றும் அதையொட்டி இருக்கும் நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள் ஆகியவை நிலக்கரி அதிகமுள்ள பகுதிகளாகும்.
பாதிக்கும் மேற்பட்ட இந்தியாவின் வணிக ரீதியிலான மின்சார ஆற்றல் தேவைகள் நிலக்கரியினால் பூர்த்தி செய்யப் படுகின்றன.