சர்வதேச நிதியியல் கழகமானது (IFC), அதன் பசுமைப் பங்கீடு சார்ந்த அணுகுமுறை (GEA) கொள்கைக்கான ஒரு புதுப்பிப்பினை வெளியிட்டுள்ளது.
புதிய நிலக்கரித் திட்டங்களை ஆதரிப்பதற்காக, இனிமேல் நிதி இடைத்தரகர் சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
சர்வதேச நிதியியல் கழகம் என்பது உலக வங்கியின் ஒரு தனியார் துறைப் பிரிவாகும்.
முன்னதாக, பசுமைப் பங்கீடு சார்ந்த ஒரு அணுகுமுறையானது 2025 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி வழங்கீட்டினைப் பாதியாக குறைக்க வேண்டும் என்றும், மேலும் அதனை 2030 ஆம் ஆண்டில் பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது, ஆனாலும் இது புதிய முதலீடுகளைத் தடுக்கவில்லை.