TNPSC Thervupettagam

நிலக்கரி தேவை குறித்த அறிக்கை

December 28 , 2024 25 days 87 0
  • 2027 ஆம் ஆண்டு வரையிலான உலக நாடுகளின் நிலக்கரி தேவை, விநியோகம் மற்றும் வர்த்தக போக்குகளை இந்த அறிக்கை கணித்துள்ளது.
  • சர்வதேச எரிசக்தி முகமை (IEA) ஆனது, உலகளாவிய நிலக்கரி நுகர்வு ஆனது 2024 ஆம் ஆண்டில் 8.7 பில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • தற்போது, ​​சீனாவின் மின்சார உற்பத்தியில் சுமார் 60% நிலக்கரியிலிருந்து மட்டுமே மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நிலக்கரியின் தேவைகள் அதிகரித்து வருகின்றன.
  • உலகளாவிய நிலக்கரி உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் இல்லாத அளவிற்கு சாதனை உச்சத்தை எட்டும் என்றும், பின்னர் இந்த நிலையானது 2027 ஆம் ஆண்டில் சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலக நிலக்கரி உற்பத்தி வளர்ச்சியில் இந்தியா மிகப்பெரியதொரு பங்களிப்பாளராக உள்ளதோடு 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களை தாண்டியது.
  • இந்திய நிலக்கரி உற்பத்தியானது 2023 ஆம் ஆண்டில் 10% வளர்ச்சியடைந்தது, மேலும், 2024 ஆம் ஆண்டில் 8% உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்