நிதி சார் ஊக்கத் தொகை திட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்
நியூ எரா கிளீன்டெக் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட்
கிரேட்டா எனர்ஜி லிமிடெட்
நிலக்கரி வாயுவாக்கத்தினை நன்கு விரைவுபடுத்துதல், கார்பன் வெளியேற்றத்தை வெகுவாகக் குறைத்தல், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலையான மேம்பாட்டினை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக வேண்டி 8,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஆனது தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றை நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது.