TNPSC Thervupettagam

நிலக்கரி 2022: 2025 ஆம் ஆண்டிற்கான பகுப்பாய்வு மற்றும் முன்னறிவிப்பு

December 24 , 2022 700 days 344 0
  • இது சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) வெளியிடப்பட்டது.
  • உலக நிலக்கரித் தேவையின் வளர்ச்சி இயந்திரமாக நிலக்கரி தொடர்ந்து இருக்கப் போவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • அண்மைக் காலத்தில் இரும்பு மற்றும் எஃகுத் துறையில் நிலக்கரிப் பயன்பாட்டின் அளவினை மாற்றக் கூடிய குறைந்த உமிழ்வினை வெளியிடக் கூடிய அளவில் வேறு சில மாற்றுகள் எதுவும் இல்லை.
  • 2022 ஆம் ஆண்டில், உலக நிலக்கரித் தேவை முதல் முறையாக எட்டு பில்லியன் டன்களை எட்டியது.
  • இது 2013 ஆம் ஆண்டில் பதிவான முந்தையச் சாதனையை முறியடித்தது.
  • இந்தியா, சீனாவுடன் சேர்ந்து, உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் நாடாகத் திகழ்கிறது.
  • இந்தியாவின் சொந்த நிலக்கரி உற்பத்தியானது 2022 ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவின் நிலக்கரி நுகர்வானது 2007 ஆம் ஆண்டு முதல் 6 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இரட்டிப்பாகியுள்ளது.
  • உலகளவில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரிச் சுரங்கம் சார்ந்த சொத்துக்களில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்