TNPSC Thervupettagam

நிலத்தடித் தண்ணீர்ப் பயன்பாடு குறித்த பஞ்சாப் கொள்கை

February 7 , 2023 530 days 269 0
  • பஞ்சாப் தண்ணீர் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PWRDA) ஆனது 2023 ஆம் ஆண்டு பஞ்சாப் நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பு வழி முறைகளை அறிவித்துள்ளது.
  • அம்மாநிலத்திலிருந்து நிலத்தடி நீரைப் பிரித்தெடுப்பதற்கான கட்டணத்திலிருந்து விலக்கு பெறாத அனைத்துப் பயனர்களுக்கும் பிப்ரவரி 01 முதல் பஞ்சாப் அரசு கட்டணம் விதிக்கத் தொடங்கியுள்ளது.
  • இருப்பினும், இந்தப் புதிய வழிகாட்டுதல்கள், வேளாண்மை, குடிநீர் மற்றும் வீட்டு தேவைகளுக்கான நிலத்தடி நீர்ப் பயன்பாடுகளை உள்ளடக்கவில்லை.
  • மாதத்திற்கு 300 கன மீட்டருக்கும் குறைவான அளவில் நிலத்தடி நீரைப் பிரித்து எடுக்கும் அனைத்துப் பயனர்களுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டு உள்ளது.
  • பஞ்சாப் மாநிலத்தின் தொகுதிகள் வருடாந்திர நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் அளவை அடிப்படையாகக் கொண்டு மூன்று மண்டலங்களாக (பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு) வகைப் படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்