மேகாலயாவில் நிலத்தடியில் வாழும் ஒரு புதிய மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது அருகிவிட்ட இனமான பொன் மீனைப் போன்ற உடற்கூறு அமைப்பைக் கொண்டு உள்ளது.
இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி மீன் இனம் இதுவாகும்.
இந்தியாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடியில் வாழும் அனைத்து மீன்களும் சிறிய மீன்களாகும். இது நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடியில் வாழும் மீன் இனங்களில் மிகப் பெரியதாகும். இது உலக அளவில் நிலத்தடியில் வாழும் மீன் இனங்களில் மிகப் பெரியதாகக் கருதப்படுகின்றது.
இந்தியாவில் மிகப் பரவலாக நுகரப்படும் பொன் மீன் (mahseer) ஆனது பெரும்பாலும் "வேகமாக ஓடும் நீரோடைகள், ஆறுகள் மற்றும் பெரிய நீர்த் தேக்கங்களில் வாழ்கின்றது.
இந்தப் புதிய இனங்கள் மேகாலயாவின் ஜெயந்தியா மலையின் நிலத்தடியில் வாழும் பொன் மீனைப் போன்றது.