TNPSC Thervupettagam

நிலத்தடி நீரில் ஃப்ளூரின் மாசுபாடு 2024

September 4 , 2024 36 days 83 0
  • ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் கிழக்கு கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிலத்தடி நீரில் ஃப்ளூரைடு மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.
  • ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இந்த ஃப்ளூரைடு மாசுபாடு நிலவியது.
  • அதிகப்படியான ஃப்ளூரைடு அளவானது எலும்புப் புளூரின்மிகைமை (ஃப்ளோரோசிஸ்) போன்ற நோய் நிலைகளின் அபாயத்தை அதிகரிப்பதோடு பல் சிதைவு விகிதத்தைத் துரிதப்படுத்துகிறது.
  • தேசிய அளவில் அனுமதிக்கப்பட்ட ஃப்ளூரைடின் வரம்பு 1.50 மில்லிகிராம் / லிட்டர் ஆகும்.
  • ஒரு லிட்டருக்கு 1.50 மில்லிகிராம் அளவுக்கு மேல் மாசுபட்டால், அந்த நீர் குடிப்பதற்குத் தகுதியற்றதாகக் கருதப்படுகிறது.
  • வறண்ட, மேற்கு இந்தியப் பகுதிகளில் நிலத்தடி நீரில் ஃப்ளூரைடின் சராசரி செறிவு அதிகமாக இருந்தது.
  • இந்தத் தரவரிசையில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய சில மாநிலங்களில் பருவமழைக்குப் பிந்தைய ஃப்ளூரின் செறிவு இயல்பை விட அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்