நிலத்தினால் சூழப்பட்ட நாடுகளுக்கான 10 ஆண்டு கால செயல் திட்டம்
December 29 , 2024 24 days 87 0
நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் (LLDC) எதிர்கொள்ளும் பல்வேறு மிகப் பெரும் தனித்துவமானச் சவால்களை எதிர்கொள்வதற்காக 10 ஆண்டு காலச் செயல் திட்டத்தினை ஐக்கிய நாடுகள் பொது சபை (UNGA) ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்மானம் ஆனது, நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கான 2024-2034 ஆகிய காலக் கட்டம் வரையிலான பத்தாண்டு காலச் செயல்திட்டம் என்ற தலைப்பில் முன் வைக்கப்பட்டது.
வியன்னா செயல் திட்டம் (2014-2024) & அல்மாட்டி செயல் திட்டம் (2003) ஆகியவற்றின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
2034 ஆம் ஆண்டிற்குள் அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை 50% உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பேரிடர் இடர் குறைப்பு 2015- 2030 காலக் கட்டத்திற்கான செண்டாய் கட்டமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் LLDC நாடுகளில் பேரழிவு அபாயத்தைக் குறைப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது.
நிலத்தினால் சூழப்பட்ட நாடுகள் என்பவை கடலுக்கான நேரடி அணுகல் இல்லாத நாடுகள் ஆகும்.
சுமார் 570 மில்லியன் மக்கள்தொகை கொண்ட, 32 நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் உள்ளன.