TNPSC Thervupettagam

நிலத்திலிருந்து வானிற்கு ஏவக்கூடிய தேசிய உயர்தர ஏவுகணை அமைப்பு - II

July 31 , 2018 2181 days 675 0
  • நிலத்திலிருந்து வானிற்கு ஏவக்கூடிய தேசிய உயர்தர ஏவுகணை அமைப்பு – IIவினை (National Advanced Surface-to-Air Missile System - II - NASAMS - II) வாங்குவதற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
  • இது வான்வழி தாக்குதல்களிலிருந்து தேசிய தலைநகரப் பகுதிகளை பாதுகாப்பதற்கான உயர்தர வான்வழி பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
  • நார்வேயின் KONGSBERG பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையத்துடன் இணைந்து ரெய்தியேன் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட NASAMS-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு NASAMS-II ஆகும்.
  • இது 2007-லிருந்து செயல்பாட்டில் உள்ளது.
  • NASAMS-II ஆனது அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் DC-யினை பாதுகாக்கும் வான்வழி பாதுகாப்பு பிணையத்தின் ஒரு பகுதியாகும்.
  • இதன்மூலம் நாட்டின் தலைநகரத்தினை பாதுகாப்பதற்கான சொந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பினைக் கொண்ட நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா இணைய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்