TNPSC Thervupettagam

நிலநடுக்கோட்டு மின்னோட்டம் - இந்திய மாதிரி

November 11 , 2024 14 days 81 0
  • பூமியின் புவி காந்த நிலநடுக் கோட்டு ரேகையானது இந்தியாவின் தென் முனைக்கு மிக அருகில் செல்கிறது.
  • நிலநடுக்கோட்டு மின்னோட்டம் (EEJ) எனப்படும் 100 kA வரிசையின் தனித்துவமான மற்றும் மிகவும் வலுவான மின்னோட்டம் ஒன்று உள்ளது.
  • இது மேல் மட்ட வளிமண்டலத்தில் சுமார் 105-110 கிமீ உயரத்தில் பாய்கிறது.
  • இந்தத் தீவிர மின்னோட்டப் பாய்வு காரணமாக, நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள புவி காந்தப்புலம் ஆனது சில பத்துகள் முதல் சில நூறு நானோ டெஸ்லாக்கள் (nT) அளவிற்கு மேம்படுத்தப்படுகிறது.
  • புவி காந்தப்புல மேம்பாட்டின் மூலம் இந்த மின்னோட்டத்தின் தீவிரத்தை அளவிடுவது அயனி மண்டல மின்புலத்தின் மாறுபாட்டைப் பற்றிய மிகவும் முக்கியமான புரிதலை வழங்குகிறது.
  • நவி மும்பையில் உள்ள இந்தியப் புவி காந்தப் புல கல்வி நிறுவனத்தின் (IIG) அறிவியல் ஆய்வாளர்கள் EEJ மின்னோட்டத்தை மிகத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய செயலறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
  • சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள், உலகளாவிய வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பின் (GNSS) அடிப்படையிலான வழிகாட்டுதல் / நிலைப்படுத்தல் மற்றும் பல்வேறு இன்ன பிற செயற்கைக் கோள் தொடர்பு இணைப்புகள் மற்றும் மின்னாற்றல் கட்டமைப்புகளில் EEJ பாய்வின் தாக்கத்தை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்