நிலம் குவிப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசாங்கம் ஆனது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று, 2024 ஆம் ஆண்டு நிலம் குவிப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட விதிகளை வகுத்துள்ளது.
இந்தத் திட்டம் ஆனது, புதிய பகுதிகளின் திட்டமிடப்பட்ட உருவாக்கத்தினை எளிதாக்குவதோடு, அடிப்படை வசதிகளை வழங்கி, மனை விற்பனை சார்ந்த உள்கட்டமைப்புகளுக்காக நிலத்தைத் திரட்ட உதவும்.
தனிநபர்/தனிநபர்களுக்குச் சொந்தமான நிலத்தை ஒருங்கிணைத்து, தகுந்த திட்டமிடல் ஆணையத்தின் உதவியுடன் அதை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவுகிறது.