TNPSC Thervupettagam

நிலம் சார் துறைமுகம் - சப்ரூம்

April 6 , 2024 264 days 350 0
  • இந்திய-வங்காளதேச எல்லையில், தெற்கு திரிபுராவில் உள்ள சப்ரூம் என்னுமிடத்தில் 3வது நிலம் சார் துறைமுகமானது திறக்கப்பட்டுள்ளது.
  • இது ஃபெனி ஆற்றின் மீதுள்ள மைத்ரீ பாலம் வழியாக வங்காளதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் துறைமுகமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும்.
  • நிலம் சார் துறைமுகம் என்பது தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகள் மற்றும் இரயில்வே பகுதிகள் ஆகியவற்றினை உள்ளடக்கிய வகையில் சர்வதேச எல்லைகளில் நிறுவப்படும் ஒரு பகுதி ஆகும்.
  • இது 1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் அல்லது 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் நிலம் சார் சுங்க நிலையம் அல்லது குடியேற்றச் சோதனைச் சாவடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்