TNPSC Thervupettagam

நிலவின் சுற்று வட்டப் பாதையில் உள்நுழைவு

August 3 , 2023 481 days 305 0
  • சந்திரயான்-3 விண்கலமானது புவியின் இயக்கத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்டச் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அடுத்து அந்த சுற்றுப் பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுப் பாதையில் நுழைக்கப் பட்டுள்ளது.
  • இது நிலவின் அருகாமைக்குக் கொண்டு செல்லும் சுற்றுப் பாதையைப் பின்பற்றும்.
  • சந்திரயான்-3 விண்கலமானது தற்போது நிலவின் சுற்று வட்டப் பாதையில் உள்ளது.
  • அது நிலவில் இருந்து சுமார் 40,000 கி.மீ. தொலைவினை அடையும் போது நிலவின் ஈர்ப்பு விசையின் தாக்கத்தினை எட்டத் தொடங்கும்.
  • அங்கிருந்து, நிலவின் ஒவ்வோர் சுற்று வட்டப் பாதை உந்துதலும் நிலவின் மையப் பகுதியில் இருந்து விண்கலம் உள்ள தொலைவினை 4,000 கி.மீ. முதல் 5,000 கி.மீ. வரை நெருங்கச் செய்யும்.
  • விண்கலம் 100 கி.மீ. நீள சுற்று வட்டப்பாதையில் நுழைவதற்கு முன்பு அதனை 1,000 கி.மீ. தொலைவினை நெருங்கச் செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்