நிலவின் தூசியானது, எரிமலைப் பாறையால் ஆனதோடு மற்றும் அடர் சாம்பல் நிறம் கொண்டது.
அதன் கூர்மையான முனைகள் கொண்ட துகள்கள் மற்றும் அதன் ஒட்டும் பண்புகள் காரணமாக இது விண்வெளி ஆய்வுக் கருவிகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
ஆராய்ச்சியாளர்கள் பெரிய ஆடிகள் மூலம் ஒரே இடத்தில் செறிவூட்டப்பட்ட சூரிய ஒளியைப் பயன்படுத்தி, அதன் மூலம் வெற்றிகரமாக நிலவின் தூசிப் படலத்தினை உருக்கி திடமான பாறை அடுக்குகளாக மாற்றி, ஓடுகளை உருவாக்கியுள்ளனர்.
பரந்த நிலவு மண் பகுதிகளில் திடமான மேற்பரப்புகளை உருவாக்குவதற்காக இந்த ஓடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, அதன் மூலம் அவை சாலைகள் மற்றும் தரையிறங்கும் திண்டுகளை அமைப்பதில் பயன்படுத்தப்படும்.