சந்திரயான்-1 கலத்தின் தரவு, பூமியில் இருந்து வெளிவரும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள் அதன் துணைக் கோளான நிலவில் தண்ணீரை உருவாக்கக்கூடும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
நிலவில் உள்ள நீர் மூலக்கூறுகளைக் கண்டுபிடிப்பதில் சந்திரயான்-1 முக்கியப் பங்கு வகித்தது.
புரோட்டான்கள் போன்ற உயர் ஆற்றல் துகள்களால் ஆன சூரியக் காற்று ஆனது, நிலவின் மேற்பரப்பில் மோதுகிறது.
நிலவில் நீர் உருவாகுவதற்கான முதன்மையான வழிகளில் ஒன்றாக இது கருதப் படுகிறது.
பூமியின் காந்தப்புலத்தில் (மேக்னட்டோடெயில்) நிகழும் நீர் உருவாக்கம் ஆனது நிலவு அந்தப் புலத்திற்கு வெளியே இருக்கும் போது உருவாகும் செயல்முறையினை ஒத்து உள்ளது.
இது அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களை உள்ளடக்கிய, சூரியக் காற்றின் புரோட்டான்களுக்கு அப்பால் கூடுதலான நீர் உருவாக்கச் செயல்முறைகள் நிகழ்வதைக் குறிப்பிடுகிறது.