TNPSC Thervupettagam

நிலவின் நீர் உருவாக்கம்

September 28 , 2023 425 days 358 0
  • சந்திரயான்-1 கலத்தின் தரவு, பூமியில் இருந்து வெளிவரும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள் அதன் துணைக் கோளான நிலவில் தண்ணீரை உருவாக்கக்கூடும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
  • நிலவில் உள்ள நீர் மூலக்கூறுகளைக் கண்டுபிடிப்பதில் சந்திரயான்-1 முக்கியப் பங்கு வகித்தது.
  • புரோட்டான்கள் போன்ற உயர் ஆற்றல் துகள்களால் ஆன சூரியக் காற்று ஆனது, நிலவின் மேற்பரப்பில் மோதுகிறது.
  • நிலவில் நீர் உருவாகுவதற்கான முதன்மையான வழிகளில் ஒன்றாக இது கருதப் படுகிறது.
  • பூமியின் காந்தப்புலத்தில் (மேக்னட்டோடெயில்) நிகழும் நீர் உருவாக்கம் ஆனது நிலவு அந்தப் புலத்திற்கு வெளியே இருக்கும் போது உருவாகும் செயல்முறையினை ஒத்து உள்ளது.
  • இது அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களை உள்ளடக்கிய, சூரியக் காற்றின் புரோட்டான்களுக்கு அப்பால் கூடுதலான நீர் உருவாக்கச் செயல்முறைகள் நிகழ்வதைக் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்