1972-ல் நிலவில் நடந்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான ஜான் யங் இயற்கை எய்தினார்.
அமெரிக்காவின் விண்வெளி விண்கலத் திட்டங்களான (Space Shurttle Programme) ஜெமினி, அப்போலா விண்வெளி ஆய்வுத் திட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக விண்வெளிக்குச் சென்ற உலகின் ஒரே விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜான் யங் மட்டுமே ஆவார்.
ஆறு முறை பூமியை விட்டு வெளியே விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் இவரேயாவர்.
அப்போலா 10 விண்கலம் மூலம் நிலாவைச் சுற்றி வந்த இவர், அப்போலோ 16 விண்கலம் மூலம் நிலவில் தரையிறங்கினார்.