TNPSC Thervupettagam

நிலவிற்கான ஒருங்கிணைந்த நேர மண்டலம்

April 15 , 2024 224 days 285 0
  • அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகம் (OSTP) ஆனது நிலவிற்கான நேரக் குறிப்பு அமைப்பினை உருவாக்க இணையுமாறு சர்வதேச நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
  • நாசா நிறுவனம் ஆனது 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒருங்கிணைந்த நிலவு நேரத்தை அமைப்பதற்கான உத்தியினை இறுதி செய்ய உள்ளது.
  • இது பூமியில் உள்ளதைப் போன்ற நேர மண்டலம் அல்லாமல் நிலவிற்கான முழுமையான நேரக் குறிப்பறிதல் அமைப்பு ஆகும்.
  • நிலவில் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால், பூமியுடன் ஒப்பிடும் போது, அங்குள்ள நேரம் மிக விரைவாக - ஒவ்வொரு நாளும் 58.7 மைக்ரோ விநாடிகள் - நகர்கிறது.
  • LTC ஆனது, தனது செயல்பாட்டிற்காக அதி துல்லிய நேர நிர்ணயம் தேவைப்படுகின்ற,  நிலவிற்கான ஆய்வு விண்கலம் மற்றும் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றிற்கான ஒரு நேரக் கட்டுப்பாட்டு அளவுருவினை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்