வெற்றுக் கண்களுக்குப் புலப்படக் கூடிய சந்திரனின் இருள் நிறைந்தப் பகுதிகள், 'மேர்' (நிலவின் இருள் நிறைந்த பகுதி) என்று அழைக்கப் படுகின்றன.
அவை சூரியக் குடும்பத்தினுடைய முற்கால மாற்றங்களின் எஞ்சியப் பகுதிகள் ஆகும்.
பூமியில் ஏற்பட்ட இந்த மோசமான நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை.
பூமியில் இருந்து பார்க்கும் போது புலப்படக்கூடிய, நிலவில் உள்ள பெரிய அளவிலான மேர் எனப்படும் பகுதிகள் பெரும்பாலும் எரிமலை பாறைகளால் ஆன பசால்ட் பாறைகளைக் கொண்டுள்ளது.
இந்தப் பகுதிகள் ஆனது சந்திரன் எவ்வாறு குளிர்ச்சியடைந்து மாற்றம் பெற்றது என்பதற்கான சான்றுகளைக் கொண்டுள்ளன.
தற்போது பாறைகளாக மாறியுள்ளவற்றினை, உருக்கிப் படிகமாக்குவதற்கு மூல ஆதாரமாக இருந்த வெப்ப ஆற்றல் எது என்பது பற்றியத் தகவல்களையும் அவை வழங்குகின்றன.
அப்பல்லோ, லூனா மற்றும் சாங்'இ-5 ஆகிய ஆய்வுக் கலங்கள், நிலவின் இருண்டப் பகுதியிலுள்ள பசால்ட் பாறைகளின் மாபெரும் மாதிரித் தொகுப்பினைச் சேகரித்துப் பூமிக்கு கொண்டு வந்துள்ளன.
அப்பல்லோ ஆய்வுக் கலம் கொண்டு வந்த நிலவின் இருண்டப் பகுதியிலுள்ள பசால்ட் பாறைகளின் மாதிரிகள் 3.8–3.3 Ga காலத்திற்கு முந்தையவை (Ga என்பது ஒரு பில்லியன் ஆண்டுகள்) ஆகும்.
நிலவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் காரணமாக அங்கிருந்த மூலப் பொருட்கள் உருகியதன் விளைவாக இந்த பசால்ட் பாறைகள் உருவாகியிருக்க வேண்டும் என்று மதிப்பீடுகள் காட்டுவதாக இஸ்ரோ கூறியது.
மேலும், இந்த பசால்ட் பாறைகள் ஆனது குளிர்ந்த, ஆழமற்ற மற்றும் உட்கூறுகள் ஆகியவற்றின் வேறுபட்டுக் காணப்பட்ட சந்திரனின் உட்புறப் பகுதியிலிருந்து தோன்றியது என்பதனையும் அவை வெளிப்படுத்துகின்றன.
சந்திரனின் உட்புறப் பகுதியானது 4.3 - 3.9 Ga காலத்திலிலேயேப் பசால்ட் பாறைக் குழம்பு வடிவில் உருகியுள்ளது.
பொட்டாசியம், அருமண் தனிமங்கள் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த ப்ரோசெல்லரம் க்ரீப் டெர்ரேன் (PKT) எனப்படும் சந்திரனின் ஒரு பகுதியானது பின்னர் 3.8-3.0 Ga காலத்தில் உருவானது.