நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்துக் காணப்படும் கிரானைட் (கருங்கல்) கற்களின் மிகப்பெரியப் பகுதியானது அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
இது காம்ப்டன்-பெல்கோவிச் எரிமலை பகுதி எனப்படும் தொலைதூரப் பரப்பிற்குக் கீழே கண்டுபிடிக்கப்பட்ட 50-கிலோ மீட்டர் விட்டம் கொண்ட கிரானைட் அமைப்பு ஆகும்.
3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த எரிமலை அல்லது எரிமலைகளுக்கு மூலமாக அமைந்த உருகிய எரிமலைக் குழம்புகளின் குளிர்ந்தப் பகுதிகளிலிருந்து இது உருவாகியிருக் கூடும் என கருதப்படுகிறது.
நிலவின் மேலோடுக்கில் உள்ள மற்றப் பாறைகளுடன் ஒப்பிடுகையில், கிரானைட்டில் யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்கள் அதிக அளவில் உள்ளன.