கடைசி நிமிட எந்திரக் கோளாறுகள் இருந்தபோதிலும், ஜப்பானின் "மூன் ஸ்னைப்பர்" விண்கலம் நிலவில் துல்லியமாக தரையிறங்கியது.
இதன்மூலம், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, நிலவில் மிதமான வேகத்தில் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் மாறியது.
நிலவை ஆய்வு செய்வதற்கான ஆளில்லாத, திறன் மிக்க தரையிறங்கு கலம் (SLIM) ஆனது "மூன் ஸ்னைப்பர்" என்றும் அழைக்கப்படுகிறது.
அதன் துல்லியமான தொழில்நுட்பம் காரணமாக, நிலவில் உள்ள ஒரு பள்ளத்தில் நிர்ணயிக்கப் பட்ட ஒரு குறிப்பிட்ட தரையிறங்கும் இடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் தரையிறங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வல்லுநர்கள் பல கிலோமீட்டர்கள் வரை நிர்ணயித்து வைத்திருக்கும் வழக்கமான தரையிறங்கும் மண்டல வரம்பை விட இது மிகவும் துல்லியமானது.
SLIM ஒரு துல்லியமான மிதவேக தரையிறக்கத்தில் வெற்றி பெற்றது.
தரையிறங்கிய இடமானது, இலக்குப் பகுதியில் இருந்து சுமார் 55 மீட்டர் தொலைவில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.